பிறருக்கு உதவி செய்வது மன நிறைவைத் தருகிறது – இந்திய ராணுவத்தினர் தகவல்
இந்திய ராணுவத்தில் பணியாற்ற்றி வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து சீமை பட்டாளம் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இவர்கள் கொரானாவையொட்டி போடப்பட்ட ஊரடங்கால், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வறுமையால் வாடும் ஏழை எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புலியடிதம்பத்தில் இயங்கிவரும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்திற்கு, மதிய உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கினார்கள். மேலும் ,மனநல காப்பகத்திற்கு ரொக்க தொகையாக ரூ15,000 நீதியையும் வழங்கினர். இவர்களின் மனித நேய செய்கையை பாராட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

முன்னதாக சீமைப் பட்டாள ராணுவ வீரர்கள் மறவமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், புலியடி தம்மம் பகுதிகளில் உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் சுமார் 500 மரக்கன்றுகளை நட்டனர். நாட்டுக்காக ராணுவத்தில் பணியாற்றுவது உடன், தங்களது மாவட்ட மக்களுக்கு இது போன்ற உதவிகள் செய்வது மன நிறைவைத் தருவதாக சீமை பட்டாளம் ராணுவத்தினர் தெரிவித்தனர்.







