--- --:--:-- --

தலைமை காவலருக்கு கொரோனா எதிரொலி.கோவையில் துடியலூரை தொடர்ந்து சூலூர் காவல் நிலையமும் மூடல் !!!

16

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அக்காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

 

மேலும்,காவல் நிலையம் தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்றும் துடியலூர் காவல் நிலையத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அக்காவல் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும்,

 

சூலூர் காவல் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து பிரிவு காவல் நிலைய வளாகத்திற்கு சூலூர் காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து சூலூர் காவல் நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.மேலும்,உடன் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon