--- --:--:-- --

அரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வந்து விரைவாக பணியாற்ற வேண்டும் என உத்தரவு..!

13

நிலுவையில் இருக்கும் கோப்புகளை விரைந்து முடித்து அனுப்ப அரசு ஊழியர்கள் வேகமாக பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊழியர்களின் வருகை பதிவு விவரங்களை தினமும் காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனைத்து துறைகளின் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.

 

கொரொனா பரவலின் காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் தமிழக அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு குழுக்களாகப் பிரிந்து சுழற்சி முறையில் பணிக்கு வருகின்றனர். இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் நிலுவையில் இருக்கும் கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டி இருப்பதால் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

 

காலை 10:30 மணிக்கு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார் . ஊழியர்களின் வருகை தீவிரமாக கண்காணிப்பதோடு அவர்களின் வருகை பதிவேடு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனைத்து துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon