--- --:--:-- --

கொரொனா அறிகுறியுடன் இருந்த பெண் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம்…!

6

உத்திரபிரதேசத்தில் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி 19 வயது இளம்பெண் ஒருவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

ஹன்சிகா யாதவ் என்ற அந்தப் பெண் டெல்லியிலிருந்து உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் நகருக்கு பயணித்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சகபயணிகள் கூறவே பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் ஹன்சிகா யாதவை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து விரைவு சாலையில் தூக்கி வீசி உள்ளனர்.

 

இதில் பலத்த காயமடைந்த ஹன்சிகா யாதவ் அடுத்த அரை மணி நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon