--- --:--:-- --

முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஜூலை 14இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

11

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு கூட்டத்தில் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரொனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

 

கொரொனா பரவலை கட்டுபடுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற 15ம் தேதியுடன் பொதுப் போக்குவரத்துக்கான தடை முடிவடைந்திருக்கும் நிலையில் பொது முடக்க தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

 

ஓபிசி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஆண்டு வருமானத்தை அளவீடாக கருதக் கூடாது என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon