--- --:--:-- --

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் கொரொனா வராது என விளம்பரம்..! உண்மையா?

9

உதகையில் டார்க் சாக்லேட்டில் கொரொனா வைரசை எதிர்க்கும் சக்தி இருப்பதாக கூறி விற்பனை செய்த சாக்லேட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவாமல் இருக்க டார்க் சாக்லேட் சாப்பிடுமாறு விளம்பரம் செய்யப்பட்டது. இதனை அறிந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த சாக்லேட்டை பரிசோதனை செய்தனர்.

 

மேலும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஆதாரத்தையும் அந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்தில் சாக்லேட் செய்வதற்கு அனுமதி பெறவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் சாக்லேட்டை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை முடிவை பொருத்து சாக்லேட் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon