மும்பையில் வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்து..!
மும்பையில் வணிக வளாகத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் அதிகாலை 3 மணிக்கு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்து மேல்தளங்களுக்கு பரவிய தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
ரோபோக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வணிக வளாகத்தில் உள்ள 77 கடைகளில் பெரும்பாலானவை செல்போன், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள் என்பதால் தீ மேலும் பரவும் அபாயம் உள்ளது. வணிக வளாகத்தில் பல மணி நேரமாக பற்றி எரியும் தீயால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.







