ஒரே நாளில் 4 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணங்கள் தடுக்கப்பட்டது..!
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் நான்கு சிறுமிகளுக்கு நடைபெறவிருந்த திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். காட்பாடியை சேர்ந்த 15 வயது சிறுமி, கர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சமூக நலத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதேபோல ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த இரு சிறுமிகளின் திருமணங்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து நீக்கப்பட்ட 4 சிறுமிகளும் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காட்பாடியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்த நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாள் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்ததையடுத்து அவரை காப்பகத்தில் சேர்த்தனர்.







