தமிழகத்தில் இறுதியாண்டு செமெஸ்டெர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுவதாக முதலமைச்சர் கடிதம்..!
இந்தியாவில் கொரொனா பரவல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்நிலையில் கொரொனா பரவல் காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்தவேண்டும் எனவும் கூறி தேர்வுகளை நடத்த அனுமதி அளித்தது. இதனையடுத்து கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என தெரிவித்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்துவது என்பது முடியாத ஒன்று எனவும், கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து மாநில அரசுகளை முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.







