--- --:--:-- --

பாகிஸ்தான் விமானிகளுக்கு உரிய கல்வி தகுதி இல்லாததால் விமானங்கள் அமெரிக்க வான்பரப்பில் பறக்கத் தடை..!

6

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லின்ஸ் விமானங்கள் தனது வான்பரப்பில் பறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. மே மாதத்தில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லின்ஸ் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து பாகிஸ்தானில் விமானிகளாக பணியாற்றி வந்தோரில் மூன்றில் ஒரு பங்கினர் உரிய கல்வித் தகுதி இல்லாதவர்கள் என தெரியவந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொரொனா சூழலில் அமெரிக்காவில் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டவரை திருப்பி அழைத்து செல்ல சிறப்பு விமானங்களை இயக்க அமெரிக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்திருந்தது.

 

பாகிஸ்தான் விமானிகளின் தகுதி பற்றி அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு கவலை தெரிவித்ததையடுத்து முன்பு அளித்த சிறப்பு அனுமதியை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது . இதேபோல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லின்ஸ் விமானங்களுக்கு ஆறு மாதத்திற்கு தடை விதித்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon