--- --:--:-- --

நாளை மாலை வெளியாகிறது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு..!

12.1

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 13ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

 

மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கை, தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உயர் வகுப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவாக இந்த தேர்வு முடிவுகளை வெளியிட மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் சிபிஎஸ்இயும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த தேர்வு முடிவுகள் ஜூலை 15-ம் தேதிதான் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. தேர்வு முடிவுகளை cbse.results.nic.in, results.nic.in, cbse.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon