கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்..!
கொரொனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் தயாரிப்பில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் தொடக்க உரை நிகழ்த்தியவர் உலகளவில் இந்தியா பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறினார். கொரொனா பரவலை இந்தியா மிகவும் உறுதியாக எதிர் கொள்வதாகவும் மக்களின் நலன் மட்டுமல்லாது பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் கொரொனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த மோடி உலக குழந்தைகளுக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு தடுப்பு மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று கூறினார்.







