இராமநாதபுரம் மாவட்ட பாங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு கொரோனா நோய் அச்சமின்றி முண்டியடித்து செல்லும் மக்கள்!…!
உலகமே கொரோனா அச்சத்தால் பயந்து கொண்டு இருந்து வருகிறது இருந்தபோதிலும் மத்திய அரசும் மாநில அரசும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முழுவீச்சில் மக்கள் நலன் கருதி செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்கார தெருவில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகம் சார்பில் வங்கிக்கு வரும் நபர்களுக்கு சமூக இடைவெளி கடைபிடித்து செல்ல போதிய வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்றே காணமுடிகிறது. இதனால் இங்கு வரும் மக்கள் முண்டியடித்து கொண்டு செல்வதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகும் சூழல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று பேசப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் வங்கிக்கு போதிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என்றும் சமூக இடைவெளி கடைபிடித்து வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.







