பாடக்குறைப்பு குறித்து சிபிஎஸ்இ அளித்துள்ள விளக்கம்..!
சிபிஎஸ்இ பாடக்குறிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும் இது ஒரே ஒரு ஆண்டுக்கு மட்டும் பொருந்தும் நடவடிக்கை என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடங்களில் இடம் பெற்றுள்ள கூட்டாட்சி, மதச்சார்பின்மை, குடியுரிமை உள்ளிட்ட முக்கிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்சி செயலாளர் அனுராக் திரிபாதி கொரொனா கால சூழலை கருத்தில் கொண்டு 2020 மற்றும் 2021 ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் இந்த பாடத்திட்டக் குறைப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் என்சிஇஆர்டியின் மாற்று பாடத்திட்டத்தை பின்பற்றும் படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் சிபிஎஸ்சி பாடங்களில் சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பகுதிகள் மாற்று பாடத்திட்டத்தில் இடம்பெறும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.







