அரசு பள்ளி மாணவர்களுக்கு 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு..!
அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ஆம் தேதி ஆன்லைன் வகுப்பு தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதற்குள் பாடப்புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 34 ஆயிரத்து 482 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 718 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மற்ற மாணவர்களும் தேர்வு எழுதலாம் என்றும் தேர்வு தேதி நாளை அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார். நான்கு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







