--- --:--:-- --

மாநில அரசுகள் தங்களுக்கு என்று சொந்த தேர்வு முறையை கடைபிடிக்க அனுமதிக்க வேண்டும் : ஸ்டாலின்

3

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பிரீமிலேயர் கணக்கீட்டிற்கு சம்பளத்தை அளவீடாக நிர்ணயிப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிரீமிலேயர் பிரிவினரை கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவினை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து சந்தித்து வரும் சமூக தடைகளை புறக்கணிப்பது போன்றதாகும் என்று பிரீமிலேயர் என்ற கருதுகோள் குறித்து ஷர்மா குழு அளித்திருக்கும் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

இத்தகைய நெருக்கடியான நேரத்தில் இந்த முடிவினை திரும்பப் பெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் ரத்து செய்வதோடு மாநில அரசுகள் தங்களுக்கு என்று சொந்த தேர்வு முறையை கடைபிடிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அவசர சட்டத்தின் மூலமாக உரிய திருத்தங்கள் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon