--- --:--:-- --

கொரோனாவால் உயிரிழந்த பெண் மருத்துவர்..! இந்து முறைப்படி தகனம்..!

1.1

தஞ்சையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் மருத்துவரின் இறுதிச்சடங்கை அவரது உறவினர்கள் முன்னிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் உரிய முறைப்படி நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கும்பகோணத்தில் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமை அளித்து வரும் டாக்டர் விஷ்ணு பிரியா. உடல்நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா உறுதியான நிலையில் சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.

 

இதனையடுத்து டாக்டர் விஷ்ணு பிரியாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவுமாறு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை ஐ அம் பாதுஷாவிடம் டாக்டர் குடும்பத்தார் கேட்டுக்கொண்டனர்.

 

உடனே வந்த தமுமுக அறக்கட்டளை நிர்வாகிகள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சொந்த ஊரான கும்பகோணத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon