கோவையில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ள கொடீசியா வணிக வளாகம்..!
கோவையில் உள்ள கொடிசியா வணிக வளாகம் கொரொனா சிகிச்சை மையம் ஆக மாற்றப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கோவையில் நாளுக்கு நாள் கொரொனா அதிகரித்து வரும் நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வணிக வளாகத்தில் 150 படுகைகள் முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு அதில் கொரொனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 400 படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தனி மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.







