வறண்டு கிடந்த கிணற்றில் திடீரென நீரூற்று..ஆச்சர்யத்தில் மக்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வறண்டு கிடந்த கோவில் கிணற்றில் திடீரென பெருக்கெடுத்து வரும் தண்ணீரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஓசூர் அருகே சூளகிரி தாலுகா அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கிணறு பல ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கிணற்றில் நீர் ஊற்று பெருக்கெடுத்து தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த கிணற்றில் நீர் ஆதாரம் இல்லாமல் காணப்பட்டதாக கூறும் கோவில் அர்ச்சகர் இன்று காலை முதல் திடீரென நீரூற்று ஏற்பட்டு கிணற்றில் நீர் நிரம்பி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.







