லடாக்கில் 70 டன் வரை தாங்கும் அளவுக்கு கட்டப்பட்டு வரும் 3 பாலம்..!
லடாக்கில் ராணுவ டாங்கிகளை எளிதில் கொண்டு செல்லும் வகையில் மூன்று பாலங்களை எல்லை சாலை மேம்பாட்டு கழகம் கட்டியுள்ளது. கடந்த வாரம் லடாக்கின் நிமு பகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி கல்வான் தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை சந்தித்தார்.
இந்த நிலையில் இந்த பகுதியில் மூன்று மாதங்களில் எல்லை சாலை மேம்பாட்டு கழகம் உறுதியான மூன்று பாலங்களை கட்டி முடித்துள்ளது. நிமுவில் முன்பு 24 டன் எடையை தாங்கக் கூடிய அளவில் இருந்த பாலம் தற்போது 70 டன் வரை தாங்கும் அளவுக்கு வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளதாக எல்லை சாலை மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக பொறியாளர் கிஷன் தெரிவித்துள்ளார்.
இந்த பாலங்கள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எளிதாக ராணுவ தளவாடங்கள் செல்லலாம் என்றும் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த பாலங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







