--- --:--:-- --

விளாத்திகுளம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் உடல் எரிப்பு : போலீஸ் விசாரணை

7871d449-51bc-411b-9b47-9021804d387c

தூத்துக்குடி மாவட்டம், உள்ள வக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி இவரது மகள் முனீஸ்வரி (23)இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். முனீஸ்வரியின் காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள நிலையில் உறவினர் ஒருவரை அவருக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர்.

 

இதனால் மனவேதனை அடைந்த முனீஸ்வரி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்த முனீஸ்வரியின் உடலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக அவரது உறவினர்கள் எரித்து தகனம் செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக தகவல் அறிந்து மந்திக்குளம் கிராம நிர்வாக அதிகாரி புஷ்பராஜ், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெ்கடர் ராமசந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக முனீஸ்வரியின் தாயார் உமையபாரதி, உறவினர்கள் தங்கசாமி, சடையாண்டி என்கிற தங்கம், சரவண கண்ணன், கோபால் ஆகிய 5பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon