இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள எலிமண்ட்ஸ் ஆப்..!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவிலேயே எலிமென்ட்ஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இந்த சமூக வலைதள செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
ஸ்ரீ ரவிசங்கரின் அமைப்பை சேர்ந்த 1000 மென்பொருள் பொறியாளர்கள் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 8 இந்திய மொழிகளில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் காணப்படும் அனைத்து வசதிகளும் இந்த செயலியிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்பதால் பயனாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என இதனை உருவாக்கிய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






