90sகளின் கனவு கன்னி ” ஷெரின் ” ஸ்லிம்மாக மாறி வெளியிட்ட போட்டோ இணையத்தில் வைரல்..!
நடிகை ஷெரீன் செல்வராகவன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அவரின் குணத்திற்காகவே ஏஞ்சல் என்ற பெயரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்சும், அவருடைய ரசிகர் பட்டாளமும் கூறி வந்தது. அழகிய அசுரா பாடலின் மூலம் மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியிருந்தார். அதேநேரத்தில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட போது அவர் மிகவும் குண்டாக இருந்தார்.
ஆனால் அவருடைய நற்குணத்திற்காக அவர் பிக் பாஸ் பைனல்ஸ் வரை வந்தார். தற்போது 10 கிலோ எடை வரை குறைத்துள்ளார். தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது கடந்த ஒரு ஆண்டில் தன் 10 கிலோ எடை குறைந்துவிட்டேன் எனவும் இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இப்பொழுது என்னை நானே கண்ணாடியில் பார்ப்பதற்கு பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் முக்கியம் மகிழ்ச்சியாக இருப்பதுதான் எனவும் உடல் எடையை குறைப்பது மிகவும் எளிது எனவும் கோபமான மற்றும் கடின வார்த்தைகளை பேசாமல் எப்போது நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் போதும் உடல் எடை தானாகக் குறைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.






