--- --:--:-- --

லடாக் எல்லையில் இருந்து 2 கி.மீ வரை படையை பின்னுக்கு நகர்த்த ஒப்பந்தம்..!

4

லடாக் எல்லையில் இருந்து சீன ராணுவம் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கி இருப்பதாக இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது. இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் ஏற்பட்டிருக்கும் மோதலை தடுக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

அதில் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து இரு தரப்பும் சற்று தூரத்தில் துருப்புகளை பின் வாங்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் லடாக் எல்லையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை சீன ராணுவம் கூடாரங்களை அகற்றி விட்டு பின் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதேநேரம் கல்வான் அருகே வலுவான ஆயுதங்களோடு நிலை கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின்படி சீன ராணுவம் முழுமையாக பின் வாங்கினால் எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon