--- --:--:-- --

லடாக் எல்லைப் பிரச்னையில் சீனாவுக்கு எதிராக ஒன்றிணையும் உலக நாடுகள்… பின்னடைவை சந்திக்கும் சீனா..!

1

சீனாவுடன் லடாக் எல்லையில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

 

லடாக் எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்திருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கிறார். உலகிலுள்ள பிற பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதைப்போல லடாக் எல்லையில் சீனா தன்னுடைய ஆக்கிரமிப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக கூறினார்.

 

இறையாண்மையை காப்பதற்காக சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவிற்கு பக்கபலமாக இருப்போம் என்று தெரிவித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

 

சர்வதேச எல்லைப் பகுதியில் சீனா மேற்கொள்ளும் எந்த ஒரு மாறுதல்களையும் ஏற்க முடியாது என்று ஜப்பான் தன்னுடைய நிலைப்பாட்டை கூறியுள்ளது. அதே நேரம் பேச்சுவார்த்தைகள் மூலம் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு ஏற்படும் என்றும் ஜப்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

இதைப்போல ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஆசியான் அமைப்பில் இருக்கும் நாடுகளும் எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு தங்களுடைய ஆதரவை கூறியுள்ளன. ஏற்கனவே தென் சீன கடல் பகுதியில் செயற்கையான தீவுகளை உருவாக்கி அங்கு ராணுவ நிலைகளை சீனா நிறுத்தியதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

 

தற்போது இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒரே அணியில் ஒன்றிணைந்து இருப்பது நாட்டுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon