சீனா – இந்தியா இடையே நடந்த மோதலால் சீன மின்கருவிகள் இறக்குமதியைத் தடுக்க நடவடிக்கை..!
மின் துறைக்கு தேவையான கருவிகளை சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் இறக்குமதி செய்யவேண்டாம் என அரசுத் துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வான் மோதலுக்குப் பிறகு சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்து இந்தியாவில் மேலோங்கியுள்ளது இந்த நிலையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் தலைமையில் மாநில மின்துறை அமைச்சர்களின் கூட்டம் நடந்தது.
அதன் பிறகு பேசியஅமைச்சர் கெஸ்ஸிங் மின் துறைக்கு தேவையான கருவிகளை சீனாவிலிருந்தும், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என அரசுத் துறை நிறுவனங்களை கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
மின் துறைக்கு தேவையான கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்கப்படுத்தி இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையாக ஆகஸ்ட் 1முதல் இறக்குமதிக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாகவும் அடுத்தாண்டு முதல் இறக்குமதி வரி 40 விழுக்காடாக உயர்த்த படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.







