தனது ஒரு வயது பிஞ்சு குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலையா?
திருப்பூரில் ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கயம் ரோடு ஜெயின் நகர் பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன், நித்யா தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
வழக்கம்போல் மகுடேஸ்வரன் வேலைக்கு சென்று விட்ட நிலையில் நித்யா நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் நித்யா வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கு மாட்டிய நிலையில் இருந்துள்ளார். அருகில் ஒரு வயதுக் குழந்தையும் உயரிழந்த நிலையில் கிடந்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







