--- --:--:-- --

பிரதமர் லடாக் பயணம் வீரர்களின் மனஉறுதியை நிச்சயம் உயர்த்தும் என அமித்ஷா பேச்சு..!

7.1

லடாக் எல்லையில் இந்திய – சீனா ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ள போதும் முடிவு எட்டப்படவில்லை. எனவே இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று திடீர் பயணமாக லடாக் சென்றார்.

 

அங்கு வீரர்களை சந்தித்து உரையாடிய மோடி அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார். பிரதமரின் இந்த பயணத்திற்கு நாடு முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது. அந்த வகையில் அமித்ஷா பிரதமரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தலைமையேற்று முன்னால் செல்கிறார்.

 

துணிச்சலும், தைரியமும் இருந்தால் நமது ராணுவம் விமானப்படை மற்றும் இந்தியப் படையினருடன் லடாக் எல்லையில் பிரதமர் நரேந்திர மோடி ஜி. மாண்புமிகு பிரதமர் இந்த பயணம் நமது வீரர்களின் மன உறுதியை நிச்சயம் உயர்த்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் ஏராளமான படங்களை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தவர் ‘ லேயில் மோடி ‘ என்ற ஹேஸ் டேக்கை பயன்படுத்தி இந்த பதிவுகளை வெளியிட்டு இருந்தார். இதைப்போல பிரதமரின் பயணத்திற்கு பாரதிய ஜனதாவும் பாராட்டு தெரிவித்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon