என்.எல்.சி. விபத்து – உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் கூறியுள்ளனர். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இனி ஒரு தொழிலாளி கூட பாதிக்கப்பட மாட்டார் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற தொடர் விபத்துகளை தவிர்க்க நெய்வேலி அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவர் வேலை வழங்க ஜி கே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் நிர்வாகத்தின் கவனக்குறைவையே காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விமர்சனம் செய்துள்ளார். விபத்து ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.






