--- --:--:-- --

இரண்டாம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு..!

1

நாடு தழுவிய ஊரடங்கு ஐந்தாவது கட்டம் நேற்றுடன் முடிவுக்கு வருவதை அடுத்து இரண்டாம் கட்ட தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 31-ஆம் தேதி வரை அதற்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

 

வழிபாட்டு தளங்கள், திரையரங்குகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானம் மற்றும் ரயில் சேவைகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விதத்தில் குறைந்த அளவில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அவை விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

 

மெட்ரோ ரயில்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டம் வெளிநாட்டு விமான சேவை தற்போது உள்ள முறைப்படியே குறைந்த அளவில் இயக்கப்படும் என்றும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்ட போதும் சமவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மத்திய, மாநில அரசுகளின் பயிற்சி நிறுவனங்களுக்கு ஜூலை 15ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நீடிக்கும். கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்வு களை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்திற்கும் தடையில்லை. மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு தடை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு இ பாஸ் எதுவும் தேவை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon