--- --:--:-- --

தமிழகம் முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு… ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!!

download

தமிழகம் முழுவதும் ஜூலை 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், சென்னை’ மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தற்போதைய முழு ஊரடங்கு ஜூலை 5 வரை தொடரும் எனவும் ஜுலை மாதத்தின் அனைத்துஞாயிறுகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஜுலை 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

இதன்படி, தமிழகம் முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. மேலும் வருகிற ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். இறைச்சிக்கடைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஜூலை 15ந்தேதி வரை பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.கிராமப்புறங்களில் சிறிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது முழு ஊரடங்கு உள்ள சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 6 -ம் தேதி முதல் தேனீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon