--- --:--:-- --

மதுரையின் காய்கறிச் சந்தையிலே அதிகப்படியான கொரொனா தொற்று உருவாகியுள்ளது!

1

கொரோனா வேகமாக பரவி வரும் மதுரையில் ஒன்றல்ல, இரண்டல்ல கோயம்பேடு சந்தைகள் உருவாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு காய்கறிகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மதுரையில் கொரொனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.

 

சுமார் ஆயிரத்து 500 பேர் வரை அங்கு தொற்றுக்கு ஆளாகின்றனர். சென்னையில் கொரொனா பரவலின் ஆரம்ப கட்டத்தில் கண்ட காட்சிகள் மதுரையிலும் அரங்கேறி வருவதை காணமுடிகிறது.

 

அங்குள்ள பரவை காய்கறி சந்தையில் ஐந்து பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நாள் ஒன்றுக்கு 11 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்த பரவை ஒருங்கிணைப்பு காய்கறி சந்தை சென்னை கோயம்பேடு சந்தை போல் மூடப்பட்டுவிட்டது.

 

அங்கிருந்த கடைகள் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மதுரையில் புதிதாக கொரொனா பாதிப்புக்குள்ளான ஒரு பரவை காய்கறி சந்தை உடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து சந்தையில் பணிபுரிந்த காய்கறி வியாபாரிகள் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரத்து 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானது.

 

இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இருபத்தி ஐந்து பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுமார் 2,000 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

இதனிடையே பரவை சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு மதுரை மாட்டுத்தாவணி சந்தை வியாபாரிகள் உடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே மாட்டு தாவணி சந்தையிலும் 1,500 பேருக்கு கொரொனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon