--- --:--:-- --

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா! நோயாளிகள் அவசரம்,அவசரமாக வெளியேற்றம் !!!

0.1

கோவை மாவட்டம் காரமடையில் உள்ள கண்ணார்பாளையம் சாலையில் செளமியா மருத்துமனை செயல்பட்டு வருகிறது.இங்கு அப்பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூலநோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள சென்றுள்ளார்.அப்போது,ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் கொரோனா தொற்று உள்ள பெண்மணியை ஆம்புலன்ஸில் ஏற்று சிகிச்சைக்காக கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை அனைவரும் அவசரம்,அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மேலும்,மருத்துவமனை மருத்துவர்கள்,ஊழியர்கள் அனைவரையும் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

 

இதனையடுத்து மருத்துவமனை முழுவதும் தீயணைப்புத்துறையினரின் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஒருவார காலத்திற்கு மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon