--- --:--:-- --

சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவித்திட வேண்டும்!

11

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட பிறகும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவிக்க ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவிக்க உத்தரவிட்டும் அவர்களை விடுவிக்காமல் புழல் சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மதுரை அமர்வில் விடுதலை செய்யாத 31 பேரையும் விடுதலை செய்வதற்கான நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றிய பிறகும் கூட அவர்கள் புழலில் இருக்கக்கூடிய விசாரணை சிறையில் வைத்திருப்பது ஒரு ஆரோக்கியமான போக்கல்ல. நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் ஒன்றாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon