பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 14ல் சசிகலா விடுதலையா ?
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி விடுதலையாக வாய்ப்பு என பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர்.
தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலையாக வாய்ப்பு உண்டா என்ற ஆர்டிஐ கேள்விக்கு அது குறித்து எந்த முடிவையும் திட்டவட்டமாக கூறமுடியாது என அண்மையில் பரப்பன அக்கிரகார சிறை நிர்வாகம் கூறியிருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




