அசாமில் பெய்த கனமழை..கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!
அசாமில் பலத்த மழை பெய்ததால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கிழக்கு பகுதியான திமாஜி, மஜூலி, தின்சுகியா, திப்ரூகர் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேர மணி நேரமாக கனமழை பெய்ததால் பிரம்மபுத்திரா ஆற்றிலும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திப்ருகர் வானொலி நிலையத்தில் மழை நீர் புகுந்துள்ளது.
திம்ஸுகியா மாவட்டத்தில் டம்டம் என்ற இடத்தில் கரை மீறி வெள்ளம் பாய்வதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.






