--- --:--:-- --
10.1

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்டு,கடந்த 18ம் தேதி கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞரான கணேசன் திருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கி 108 ஊழியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிப்பு இருந்து வந்தது.மாவட்ட நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பால் பாதிப்பில் இருந்து மீண்டு பல நாட்கள் பாதிக்கப்பட்டோரின் ஜீரோவாகவே இருந்து வந்தது.பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது.கொரோனா தொற்றால் திருப்பூர் 108 ஊழியர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon