பி.எம்.கேர்ஸ் நிதி 2,000 கோடி ரூபாய் மூலம் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தயாரிப்பு..!
பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 2,000 கோடி ரூபாய் வென்டிலேட்டர் தயாரிக்கவும் ஆயிரம் கோடி ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் செலவு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரொனா பாதிப்பை தடுக்க செலவுக்காக பி.எம்.கேர்ஸ் என்ற நிதி உதவி கணக்கு தொடங்கப்பட்டது.
இதில் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சாமானியர்கள் என்று அனைவரும் இயன்ற உதவிகளை செய்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி பெறப்பட்டது எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இது மத்திய அரசின் பொதுத்திட்டம் கிடையாது.
எனவே தகவல்களை வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சில பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து 50 ஆயிரம் கோடி வேண்டிலேட்டர்களை தயாரிக்க 2000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெண்டிலட்டர் தயாரிக்கும் பணி பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கொரொனா அரசு சிறப்பு மருத்துவமனைகளுக்கு அது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






