லடாக்கில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி வழங்கிய தெலுங்கானா முதல்வர்!
லடாக் மோதலில் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட ராணுவ கர்னல் சந்தேர்ஸ் பாபுவின் குடும்பத்தினரிடம் 5 கோடி ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் வழங்கியுள்ளார்.
சூரிய பேட்டை நகரில் உள்ள சந்தோஷ் பாபுவின் வீட்டிற்கு சென்ற அவர் சந்தோஷ் பாபுவின் மனைவியிடம் 4 கோடி ரூபாய்க்கான காசோலையையும் பெற்றோரிடம் ஒருஒரு கோடி ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு தெலுங்கானா அரசில் குருப் 1 பதவிக்கான அரசாணையும் அவர் அளித்தார். ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 711 சதுர அடி வீட்டு மனை ஒதுக்கியதற்கான ஆவணங்களையும் அவர் வழங்கினார்.
சூரிய பேட்டையில் சந்தோஷ் பாபுவுக்கு வெண்கல சிலை வைக்கப்படுவதுடன் அந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் எனவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.






