ஓடும் கழிவு நீரில் கொரொனா வைரஸ்! எளிதில் பரவும் அபாயம்!
இந்திய விஞ்ஞானிகள் முதன்முதலாக கழிவுநீரில் கொரோனா வைரசின் மரபியல் கூறுகளை கண்டுபிடித்துள்ளனர். கழிவுநீர் அடிப்படையில் தொற்று நோய் பரவலை கண்காணிக்க இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
உலகின் வெகு சில நாடுகளிடம் மட்டுமே இருக்கும் இந்த தொற்றியல் ஆய்வை காந்தி நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அகமதாபாத்தில் ஓடும் கழிவுநீர் இல் உள்ள கொரோனா வைரஸ் மரபியல் கூறுகளும் அந்த நகரில் பரதேசி மரபியல் கூறும் ஒரே மாதிரியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு ஒரு சாதனை என்று பிரிட்டனின் சுற்றுச்சூழல் நுண்ணுயிர் ஆய்வாளர் ஆண்ட்ரூ ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.






