--- --:--:-- --

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

8

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், மதுரை, திருச்சி, வேலூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon