காலாண்டு விடைத்தாள் மாயமானதால் மீண்டும் தேர்வு எழுத வைக்கப்பட்ட மாணவர்கள் – குற்றச்சாட்டு!
காலாண்டு விடைத்தாள்கள் மாயமானதால் பத்தாம் வகுப்பு மாணவிகளை மீண்டும் தேர்வு எழுதி வைத்ததாக கிருஷ்ணகிரி அரசு பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள மற்றொரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளின் காலாண்டு விடைத்தாள்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் அறிவியல் தேர்வுகளின் விடைத்தாள் மாயமானதாக தெரிகிறது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் விடைத்தாள் மாயமான 15 மாணவிகளை மட்டும் அழைத்து பள்ளியின் அருகில் உள்ள டியூசன் சென்டரில் தேர்வு எழுத வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் மேலும் பல மாணவிகளும் ஏற்கனவே தேர்வு எழுதி சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.







