ஐ சி எம் ஆர் மருத்துவ குழுவின் துணை இயக்குனர் பிரதீப் கவுருக்கு கொரொனாவா? தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டர் பதிவு!
ஐ சி எம் ஆர் தமிழகம் மருத்துவ குழுவின் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அவரது கணவருக்கு கொரொனா தொற்று உறுதியானதாக சொல்லப்படும் நிலையில் தனித்து இருப்பது குறித்து பதிவு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரொனா தொற்று ஏற்படுவதற்கு அதிக ஆபத்து இருப்பதால் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். தங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று சந்தேகிக்கும் நபர்களும் இதனை பின்பற்றினால் சமூகத்தை காக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.







