கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்!
சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலாமுரளி உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலமுரளி.
கடந்த ஐந்தாம் தேதி இவருக்கு கொரொனா கண்டறியப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பால முரளி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினரும், காவல்துறையினரும் இரங்கல் தெரிவித்தனர்.
உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தியாகராயநகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக மயானத்தின் வெளியே பாலமுரளி காவல்துறையினர் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.







