தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக குளுமையான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதனால் ஒலக்கூர் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, அனந்தபுரம், மேல்மலையனூர், பழனி, ஆலம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் குளுமையான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, கீரனூர், பெருங்குடி, உடையார்பட்டி உட்பட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாகுபடி பணிகளை தொடங்கி இருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







