ஊரடங்கு காலத்தில் சமூக சேவையாற்றும் மாற்றுத்திறனாளி!
கொரொனா வைரஸை கண்டு மக்கள் அஞ்சும் இந்த நாளில் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய மனிதநேயம் பிடிபடாமல் இருக்க வில்லை. அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் செய்துவரும் செயல் பாராட்டுகளை வாங்கிக் குவிக்கின்றன. புதுச்சேரி அரியாங்குப்பத்தில் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஜோசப் புத்தகங்களை பைண்டிங் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் கிடைக்கும் வருவாயும், அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகை கொண்டும் வாழ்ந்து வரும் இவர் பல சமூக சேவைகளை அவ்வப்போது செய்து வந்தார். மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்கும் நிலையில் சுகாதாரத்தை பேணி காக்கும் முயற்சியில் களம் இறங்கிய ஜோசப் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து திட்டமிட்டு அதனை செயலாற்றி வருகிறார்.
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் அரசு வழங்கும் உதவித் தொகையையும் நண்பர்களின் பங்களிப்பையும் தனது சமூக அக்கறையை இந்த செயலிலில் பயன்படுத்தி வருகிறார் ஜோசப்.
இந்த செயலால் மக்களிடையே நாயகனாக மாறிய அவருக்கு மலர்கள் கொடுத்தும் கை தட்டியும் சிறுவர்கள் உற்சாகப்படுத்தி பாராட்டுகின்றனர். மக்களின் மனங்களில் உச்சம் தொட நற்செயல் ஒன்றே போதுமானது என்பதை எடுத்துரைத்துள்ளார் ஜோசஃப் எனும் சமூக சேவை நாயகன்.







