--- --:--:-- --

கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்து…!

8.1

மலிவான விலையில் பரவலாக கிடைக்கக்கூடிய டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து கொரோனா வைரஸ் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரொனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மருந்து ஒரு திருப்புமுனை என்று இங்கிலாந்து மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இந்த வகையான மருந்து வெண்டிலேட்டரில் இருக்கும் கொரொனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை மூன்றில் ஒரு பங்காக குறைப்பதாகவும் ஆக்சிஜன் எடுத்துக் கொள்பவர்களின் இறப்புகளை ஐந்தில் ஒரு பங்காக குறைத்துக் கொள்வதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கொரொனா வைரஸ் தொடக்கத்தில் இருந்த போதே இந்த டெக்ஸாமெதாசோன் மருந்தினைப் பயன்படுத்தி இருந்தால் 5 ஆயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் மருத்துவமனையில் இருந்து சுமார் 2000 கொரொனா நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை கொடுத்து பரிசோதித்து உள்ளனர்.

 

அதாவது இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளாத நான்காயிரம் நோயாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்து உள்ளனர். இறப்பு விகிதத்தை குறைத்து காட்டிய முதல் மருந்து இதுதான் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon