--- --:--:-- --

காலவதியான உரங்களை விற்பனை செய்த அலுவலர்கள்..!

3

திருவண்ணாமலையில் காலாவதியான உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துறை அலுவலர் தெரிவித்துள்ளார். பெரமநல்லூர் வேளாண்மை மையத்தில் 35 கிராம விவசாயிகளுக்கு காலாவதியான உரம் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

மானிய விலை அல்லாமல் முழு தொகை கொடுத்து விவசாயிகள் உரம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, வேளாண்மைத் துறை அலுவலர் சுந்தரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது உரங்கள் காலாவதியான தேதி தெரியாமல் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

35 கிராமங்களை சேர்ந்த 33 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே 50 சதவீத மானிய விலையில் உரம் வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon