--- --:--:-- --

மின் கணக்கீடு விவகாரம் தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

2

மின்சார அளவு கணக்கீடு குறித்து மின்சார வாரிய உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பொது முடக்கம் காரணமாக மின் கணக்கீடு செய்வது குறித்த மின்வாரியத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் விசாரணையில் ஊரடங்கால் 4 மாதங்களுக்கான மின் கட்டணத்தை சேர்த்து கணக்கிடுவதால் 14 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

 

இரண்டு மாதங்களுக்கு தனித் தனியாக கணக்கிட உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. அப்போது மின் கட்டண கணக்கீட்டில் எந்த விதி மீறலும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கு தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி தமிழக அரசு மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon