--- --:--:-- --

12 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம்! கட்டுப்பாடுகள் என்னென்ன?

1

கொரொனா பரவல் சென்னையில் உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில் 12 நாட்களுக்கு பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 

ஆலோசனைகளில் பேசிய மருத்துவ நிபுணர் குழுவினர் தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு இரண்டாவது வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்திய பிறகு சென்னையில் 12 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் வரும் 19ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரத்திற்கு ஒரு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், பார்சல் சேவைக்காக மட்டும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள், பால் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

தேனீர் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்ஸி தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே வாகன உபயோகத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்து அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் மட்டுமே அத்தியாவசிய தேவைக்காக செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வரும் 21ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதி என இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பால் கடைகள், மருந்தகங்கள் தவிர வேறு எந்தவித செயல்பாடுகளுக்கும் அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

 

ஏடிஎம்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் எனினும் வங்கிகள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொதுவாக பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் பல்வேறு துறைகளில் உள்ள பிற நல வாரிய உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon